26.5 C
Jaffna
January 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்: சட்டமா அதிபரின் ஆலோசனையை கோர தயாராகிறது அரசு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோளிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவவின் கருத்திற்கு எதிராகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வேட்புமனுக்கள் கோரப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர்.

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 10 பில்லியன் ரூபாவாகும் அதேவேளை மொத்த செலவு 12 பில்லியன் ரூபா என கூறப்படுவதால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாலும் தேர்தல் திகதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேவைப்பட்டால் நிதி அமைச்சு கூடுதல் நிதியை வழங்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

Leave a Comment