ரசிகர்களிற்கு காட்சி கொடுத்த ரஜினி காந்த்!

Date:

புத்தாண்டு தினத்தில் தனது வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். இவர் பண்டிகை காலங்களில் தன்னை காணவரும் ரசிகர்களை வீட்டில் இருந்தவாறு கையசைத்து பார்த்து வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கம்.

கடந்த டிசம்பர் 12ஆம் திகதி அவரது பிறந்தநாளில் எப்படியாவது ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் ஊரில் இல்லாததால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்தின் வீட்டு முன்பு நள்ளிரவு முதலாகவே ரசிகர்கள் ரஜினிகாந்த் வருவார் என காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவரின் ரசிகர்கள் தலைவா என கோஷமெழுப்பி உற்சாகமடைந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்