25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
குற்றம்

13 வயது சிறுமியையும், 20 வயது அக்காவையும் துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.

அச் சிறுமியின் மாமனின் மனைவி வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையிலேயே குறித்த சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் மாமன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டு தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை வியாழக்கிழமை (29) கைதுசெய்துள்ளானர்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள குடும்பஸ்தர் சிறுமிக்கு அக்கா முறையான 20 வயதுடைய யுவதியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment