Pagetamil
கிழக்கு

தரவை துயிலுமில்லத்தில் வனவளத்திணைக்களத்தின் பெயரில் மரம் நட முயற்சி

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்திற்குள் வனவளத்திணைக்களத்தினர் என குறிப்பிட்டு, இராணுவப்புலனாய்வாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் மேற்கொண்ட மரநடுகை முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

வனவளத்திணைக்களத்தினர் என குறிப்பிட்டு, தரவை துயிலுமில்லத்திற்குள் மரம் நடுவதற்காக குழி வெட்டப்பட்டுள்ளது.

நேற்று இந்த சம்பவம் நடந்தது.

தரவை பகுதிக்கு செல்வதற்கான பாலம் உடைந்திருந்ததால், அங்கு வெளியிடத்திலிருந்து யாரும் செல்ல முடியாத நிலையில், உள்ளூர் இளைஞன் ஒருவரை வைத்து, துயிலுமில்லத்திற்குள் குழி வெட்டப்பட்டது.

இதை அறிந்த தரவை துயிலுமில்ல ஏற்பாட்டு குழுவினர், மாற்றுப்பாதைகள் ஊடாக அங்கு சென்று, குழி வெட்டிய இளைஞனை பிடித்து விசாரித்த போது, அனைத்து விடயங்களையும் கக்கியுள்ளனர்.

அந்த இளைஞனை பொலிஸ் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது, இராணுவப் புலனாய்வாளர்கள் என நம்பப்படுபவர்கள் அங்கு வந்து, முரண்பாட்டில் ஈடுபட்டனர். அத்துடன், குழி வெட்டிய இளைனையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெருகலில் மீண்டும் பௌத்தமயமாக்கல், அருணின் பதில் என்ன?

east tamil

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

மணல் கடத்தியவர் கைது

Pagetamil

ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம்

east tamil

Leave a Comment