யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிரியாவிடை

Date:

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய விஜித குணரட்ண கடந்த 38 வருட கால பொலிஸ் சேவையினை இன்றுடன் நிறைவு செய்து ஓய்வு நிலைக்கு செல்கின்ற நிலையில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த பிரியாவிடை நிகழ்வில் மதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதோடு பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது.

இதன்போது ஓய்வு பெற்று செல்லும் பொலிஸ் மா அதிபருக்கு நினைவு பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ். மாவட்ட பொலிஸ் நியங்களின் பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்