100 KG ஐஸ் போதைப்பொருள் சிக்கியது!

Date:

சப்புகஸ்கந்த பகுதியில் சுமார் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் கைது செய்துள்ளதாக பொலிஸ் பெச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு சோதனைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பேரில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வசம் 100 கிராம் ஐஸ் மற்றும் 100 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் தொடர்பாக சப்புகஸ்கந்த, ராகஹவத்தை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு கொண்டு வரப்படுவதாக  தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்