இரண்டு இழுவை படகுகளில் இருந்த 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், புதன்கிழமை (14) தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போது படகுகளில் இருந்த சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான இழுவை படகு ஒன்றை ஆய்வு செய்த போது, 200 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு பல நாள் இழுவை படகும் தடுத்து நிறுத்தப்பட்டது.
சந்தேகநபர்கள், இரண்டு இழுவை படகுகள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1