ஐக்கிய அமீரகத்தில் முதல் விண்வெளி வீராங்கனை!

Date:

விண்வெளிக்கு அனுப்பத் தங்களது நாட்டைச் சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கனையை ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம், விண்வெளி ஆராய்ச்சியில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் தங்கள் நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனையை உலக நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் அரசு வெளியிட்ட அறிக்கையில்,

“27 வயதான நோரா அல் மத்ருஷி என்ற வீராங்கனை, ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். விரைவில் நாசாவில் நடக்கவிருக்கும் பயிற்சி வகுப்பில் இவர் கலந்துகொள்ள இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ‘நம்பிக்கை’ விண்கலத்தை அனுப்பி கடந்த ஆண்டு சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013ஆம் ஆண்டுகளில் தென் கொரியாவுடன் இணைந்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014ஆம் ஆண்டுதான் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்தது. ஆனால், அடுத்த 6 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது இதுவே முதல் முறை என்று பாராட்டப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் தங்களது பொருளாதாரத்திற்கு எண்ணெய் வளத்தை நம்பி இருப்பதை சமீப ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்