இன்றைய வானிலை!

Date:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. நாளை (12ஆம்திகதி) வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு, தாண்டிக்குளம் மற்றும் பெரிய கரைச்சிவெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

காற்று : காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்