24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
கிழக்கு

காரைதீவில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை வைத்திருந்தவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் காரைதீவு 06 மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் விசேட டெங்கு கள பரிசோதனை நடைபெற்றது. இதன்போது பரிசோதனை செய்யப்பட்ட 377 வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை வைத்திருந்த 05 வீடுகள் 02 வெற்று காணிகளுக்கு சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் பொதுமக்களுக்கு அதிகமாக நுளம்புகள் பெருக்கம் இடங்கள் சம்பந்தமான விடயங்களையும், டெங்கின் தாக்கத்தினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கினார்.

இந்த விசேட டெங்கு கள பரிசோதனையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், மற்றும் நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்களும் இணைந்து டெங்கு தள தடுப்பு பரிசோதனையில் கலந்து கொண்டார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

east tamil

சிங்களமயப்படுத்தப்படும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை

east tamil

சாகாமம் பாலம் போக்குவரத்து தடை: பெரும் சிரமத்தில் விவசாயிகள், சாரதிகள்

east tamil

பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

east tamil

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

east tamil

Leave a Comment