கட்டார் உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த ஆட்டங்களில் நெதர்லாந்து, செனகல் அணிகள் வெற்றியீட்டின.
அல் பயட் ஸ்டேடியத்தில் நடந்த குரூப் ஏ போட்டியில் நெதர்லாந்து, கட்டார் அணிகள் மோதின.
போட்டியை நடத்தும் கட்டார் இந்த தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டது.
இன்றைய ஆட்டத்தில் 2-0 என நெதர்லாந்து வெற்றியீட்டியது. அந்த அணியின் C. Gakpo 26வது நிமிடத்திலும், F. de Jong 49 வது நிமிடத்திலும் கோலடித்தனர்.
கலீபா சர்வதேச மைதானத்தில் நடந்த மற்றொரு குரூப் ஏ போட்டியில் செனகல்- ஈக்வடோர் அணிகள் மோதின. இதில் 2-1 என செனகல் வெற்றியீட்டியது.
இதன்மூலம் இரண்டு அணிகளும் குரூப் 16 சுற்றிற்கு முன்னேறியுள்ளன.
செனகல் 2002 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக நொக் அவுட் சுற்றிற்கு முன்னேறியுள்ளது.
குரூப் 16 சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியை செனகல் எதிர்கொள்ளும்.