கோல் இல்லாத 3 ஆட்டங்கள்!

Date:

கட்டாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரையில் நடந்து முடிந்துள்ள 9 போட்டிகளில் நான்கு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. அதில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 0-0 என எந்த அணியும் கோல் பதிவு செய்யாமல் ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

டென்மார்க் – துனிசியா, போலந்து – மெக்சிகோ மற்றும் மொராக்கோ – குரோஷியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளில் எந்தவொரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டிதான் 0-0 என சமனில் முடிந்தது. ஆனால், இந்த முறை இதுவரையிலான 9 போட்டிகளில் மூன்று போட்டிகள் 0-0 என முடிவடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அதுவே பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அணிகள் தங்கள் முதல் ஆட்டத்தில் முறையே 4 மற்றும் 6 கோல்களை பதிவு செய்து மாஸ் காட்டியுள்ளன.

நாளை பெல்ஜியம் – கனடா, சுவிட்சர்லாந்து – கமரூன், உருகுவே – தென் கொரியா மற்றும் போர்ச்சுகல் – கானா அணிகள் தங்கள் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. வரும் டிசம்பர் 3ஆம் திகதி வரையில் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ராஜாங்கன சத்தாரத்ன விளக்கமறியலில்

அனுராதபுர பிரதம நீதவான் சியாபத் சசிந்து விக்ரமரத்ன, பௌத்த துறவற அமைப்பிலிருந்து...

கிளிநொச்சியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல் வல்லுறவு

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 16 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல்...

விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்!

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்