வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றையதினம் (23) நிறைவேற்றப்பட்டது.
பாதீட்டு கூட்டமானது இன்றையதினம் காலை 9.30 மணியளவில் தவிசாளர் தர்சன் தலைமையில் ஆரம்பமானது.
30 உறுப்பினர்களை கொண்ட குறித்த சபைக்கு 28 உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அதனையடுத்து பாதீடு நிறைவேற்றப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1