உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இன்று புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் உத்தரவிட்டார் என்று மாநில செய்தி நிறுவனமான SPA செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவுக்கு எதிரான சவுயின் வெற்றியை விடுமுறையுடன் கொண்டாடுவதற்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த ஆலோசனைக்கு மன்னர் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளார்.
கொண்டாட்ட விடுமுறையானது அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து துறைகளிலும் உள்ள ஊழியர்களுக்கானது மற்றும் அனைத்து கல்வி நிலைகளில் உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும்.
புதன்கிழமை விடுமுறையை தொடர்ந்து வியாழன் அன்று பணிகள் தொடரும்.
முன்னதாக செவ்வாய்கிழமை கட்டாரில் நடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தியது.