ஜெர்மனி அணியினர் ஏன் வாயை மூடி போஸ் கொடுத்தனர்?

Date:

நடப்பு உலகக் கோப்பை தொடரில், குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலிஃபா சர்வதேச மைதானத்தில் விளையாடின. இதில் முன்னாள் சம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து, ரசிகர்கள் ஸ்பெயின் அணியை கடுமையான கலாய்த்தனர். இதற்கு அவர்கள் அனேகர் பயன்படுத்திய புகைப்படம்- ஸ்பெயின் வீரர்கள் வாயை மூடி கொடுத்த போஸ்.

முன்னதாக, இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் ஜெர்மனி அணி வீரர்கள் தங்களது வாயை மூடியபடி போஸ் கொடுத்திருந்தனர். அந்தப் புகைப்படத்தை பாவித்தே, ஸ்பெயினை கலாய்த்தனர்.

ஸ்பெயின் அணியினர் ஏன் இப்படி போஸ் கொடுத்திருந்தனர் தெரியுமா?

ஃபிஃபா எடுத்த முடிவு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த புகைப்படத்தை எடுத்திருந்தனர்..

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இம்முறை கட்டார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய நாடான கட்டாரில் கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு மதுபானம், போதைப்பொருள், உடலுறவு, ஆடைக் கட்டுப்பாடு, தன்பால் ஈர்ப்புக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இங்கிலாந்து, வேல்ஸ் போன்ற ஏழு ஐரோப்பிய நாடுகள் எல்ஜிபிடி+ சமூகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கட்டாரில் தன்பால் ஈர்ப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வன் லவ் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டன. அதன்படி, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை அறிவுறுத்தும் வகையில் போட்டிகளில் களமிறங்கும்போது எல்ஜிபிடி+ சமூகத்தை குறிக்கும் வானவில் கைப்பட்டையை ஆடையில் அணியவிருப்பதாக அறிவித்தனர்.

இதற்கு ஃபிஃபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, வன் லவ் பேண்ட் அணிந்து களமிறங்கினால் அந்த அணிக்கு தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது.

ஃபிஃபாவின் தடை எச்சரிக்கை அறிவிப்பால் இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகள் வன் லவ் பேண்ட் அணிவதில் இருந்து பின்வாங்கினர்.

எனினும், ஃபிஃபாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் ஜெர்மனி அணி வீரர்கள் ஜப்பானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தங்களது வாயை மூடி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்