Pagetamil
இலங்கை

மன்னாரில் ஒருவரை பலியெடுத்த விபத்து!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!