27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

திலினியின் அடிப்படை உரிமைகளிற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு செய்தவர்களுக்கு நேர்மையற்ற முறையில் ஒத்துழைத்து நீதியான விசாரணைக்கான திலினி பிரியமாலியின் உரிமையைப் பறித்துள்ளதாக சட்டத்தரணிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (08) முறைப்பாடு செய்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமது வாடிக்கையாளரின் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்கள் இலத்திரனியல் மற்றும் அச்சிடப்பட்ட இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் தொடர்ந்து வெளியிடப்படுவதாக சட்டத்தரணிகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒலி நாடாக்கள் மற்றும் காணொளிகள் கூட சமூக வலைத்தளங்களிலும், வீதிகளிலும் வெளிவருவது அரசியலமைப்புினால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறலாகும் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இந்த நடவடிக்கையை உடனடியாக விசாரணை செய்து விசாரணையை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment