26.7 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

303 இலங்கையர்களுடன் படகு காப்பாற்றப்பட்டது; இன்று கரை சேரும்: வியட்நாம் அறிவிப்பு!

கனடாவிற்கு அகதிகளாக சட்டவிரோதமாக பயணித்த 303 இலங்கையர்களுடன் மீன்பிடி படகு மீட்கப்பட்டுள்ளதாக வியட்நாம் அறிவித்துள்ளது.

ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடிக்கப்பல்  மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று, மியான்மர் கொடியுடன் 303 இலங்கையர்களுடன் கனடாவுக்குச் செல்வதாக சந்தேகிக்கப்படும் லேடி R3 சிக்கலில் இருப்பதாக ஏஜென்சிக்கு செய்தி கிடைத்தது என்றார்.

நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் உள்ள வுங் டௌவில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ​​கடல் சீற்றம் காரணமாக கப்பலின் என்ஜின் அறையில் சேதம் ஏற்பட்டு, கடல் நீர் நுழைந்தது.

மையம் பின்னர் கப்பலை தொடர்பு கொள்ள முயன்றதுடன், அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒளிபரப்பியது.

திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஜப்பானியக் கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் அந்தப் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்ததையடுத்து, லேடி R3 கப்பலில் இருந்தவர்களை ஒரு மாற்றுப்பாதையில் சென்று மீட்கும்படி கோரியது.

ஜப்பானிய கப்பலால் பாதிக்கப்பட்ட படகை அடைய முடிந்தது. அப்போது மீன்பிடி படகில் இருந்தவர்கள் பீதியில் இருந்தனர்.

பின்னர் பயணிகளை மீட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தது.

மையம் மேலும் ஐந்து கப்பல்களைத் திரட்டி, தேவைப்பட்டால் ஆதரவை வழங்குவதற்காக அந்தப் பகுதியை வட்டமிடச் சொன்னது.

264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் செவ்வாய்கிழமைக்குள் வுங் டௌவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இலங்கை கடற்படை, படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர் கடற்படையை தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாக குறிப்பிட்டது.

படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கிச் செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் பின்னர் இலங்கைக்கு அறிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல பணம் சேர்க்க போதைப்பொருள் விற்ற பட்டதாரி யுவதி கைது!

Pagetamil

மலேசியாவில் இடம்பெறும் சொற்போர் விவாத போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு!

Pagetamil

மாணவர்களிடையே அதிகரித்த புகையிலை உற்பத்திகளின் பயன்பாடு: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

east tamil

ஹிக்கடுவவில் சலவை இயந்திரத்தில் மறைக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருள்: இருவர் கைது

east tamil

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு: பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய புதிய மாற்றம்

east tamil

Leave a Comment