26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

கைதான தமிழக மீனவர்களிற்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர் வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை(7) மதியம் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் சனிக்கிழமை இரவு 2 படகையும் அதில் இருந்த 15 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(6) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் போது மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை(6) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மீனவர்களும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த 15 இந்திய மீனவர்களையும் இன்று திங்கட்கிழமை (7) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

east tamil

Leave a Comment