ஒரே பெயருடைய 178 பேர் கூடி உலகசாதனை!

Date:

உலகில் ஒரே பெயரைக் கொண்ட 178 பேர் ஒரேயிடத்தில் கூடியுள்ளனர்.இது இப்போது உலகசாதனையாகவும் மாறியுள்ளது.

ஹிரோகாசு தனகா (Hirokazu Tanaka) என்ற பெயரைக் கொண்ட 178 பேர் சந்தித்து புதிய உலகச் சாதனையைப் படைத்திருக்கின்றனர்.

ஒக்டோபர் 29ஆம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த சந்திப்பு நடந்தது.

அதற்காக வியட்நாமிலிருந்து கூட சிலர் ஜப்பானிற்கு வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் 80 வயது முதியவரும் இருந்தார். சிறு பிள்ளையும் இருந்தது.

அவர்கள் அனைவரும் தங்கள் பெயர் எழுதப்பட்டிருந்த டீசட்டையை அணிந்திருந்தனர்.

கின்னஸ் உலகச் சாதனையின் விதிமுறைகள் படி, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் 5 நிமிடங்களுக்கு உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஆனால் அனைவரையும் ஒன்று சேர்ப்பது சுலபமான செயல் அல்ல.

இந்த பெயரையுடையவர்கள் ஏற்கனவே உலகச் சாதனையை முறியடிப்பதில் இரு முறை தோல்வி அடைந்திருந்தனர். 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே 71 மற்றும் 87 பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இது அவர்களின் 3ஆவது முயற்சி.

இதற்கு முன்னதாக ஒரே பெயரைக் கொண்ட ஆக அதிகமானோர் ஒரு இடத்தில் சந்திக்கும் சாதனை 2005ஆம் ஆண்டு புரியப்பட்டது.

அப்போது மார்தா ஸ்டீவர்ட்ஸ் (Martha Stewarts) என்ற பெயரைக் கொண்ட 164 பேர் ஒரே இடத்தில் கூடினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...

யுத்த வெற்றியினால் தமிழர்களிற்கே அதிக நன்மையாம்: சொல்கிறார் அருண் சித்தார்த்தின் தலைவர்!

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக திலித்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்