விபத்தில் சாரதி பலி

Date:

புஸல்லாவை – எல்பொட தோட்டப் பகுதியில் இன்று அதிகாலை சிபேட்கோ எரிபொருள் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (43) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான 6600 லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால், வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலனில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ – புரட்டொப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோத தொலைக்காட்சி பரிவர்த்தனை நிலையம் முற்றுகை

இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இரகசியமாக...

குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறதா?: காசல் மகளிர் மருத்துவமனை விளக்கம்!

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்