இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் விரைவில் கூடவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே அதிக சர்ச்சைகள் நிறைந்த கட்சியாக இலங்கை தமிழ் அரசு கட்சி மாற்றமடைந்ததை தொடர்ந்து, இந்த அவசர கலந்துரையாடல் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி பூசல் உச்சமடைந்துள்ளது. இரா.சம்பந்தன் செயற்பட முடியாத நிலைமை அதிகரித்து செல்ல செல்ல, தமிழ் அரசு கட்சிக்குள் சச்சரவுகள் அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது.
அடுத்த அதிகார மையத்தை உருவாக்குவது தொடர்பான சர்ச்சை முற்றி, ஏட்டிக்குப் போட்டியான குற்றச்சாட்டுக்களால் தமிழ் அரசு கட்சி தொண்டர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டுமென பல தரப்பினரும் சுட்டிக்காட்டியதையடுத்து, கட்சியின் மத்தியகுழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அனேகமாக, நவம்பர் 3வது வாரத்தில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடக்கலாம்.