4 மாடி கட்டிடத்தில் ஏறி செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து பலி!

Date:

4 மாடி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து செல்ஃபி எடுத்த 15 வயதான மாணவியொருவர் நிலை தடுமாறி தரையில் விழுந்து உயிரிழந்தார்.

மேற்கு துருக்கியில் உள்ள முக்லா மாகாணத்தில் உள்ள ஒர்டகா நகரில் இந்த சோகம் நடந்துள்ளது.

நான்கு மாடிக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி.யில் 15 வயது சிறுமி தரையில் விழும் பயங்கரமான தருணம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மெலிக் கன் கனவுஸ்லர் என்ற மாணவியே உயிரிழந்தார்.

குடியிருப்பின் மேற்கூரையில் ஏறி செல்பி எடுத்த பின், தற்செயலாக கைத்தொலைபேசியை நழுவ விட்டார். அதை பிடிக்க முற்பட்ட போது சமநிலையை இழந்து, 40 அடிக்கும் உயரமான கூரையிலிருந்து கீழே விழுந்தார்.

கீழேயிருந்த கொங்கிரீட் தரையில் மாணவி விழுந்தார்.

நடைபாதையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவருக்கு முன்பாக மாணவி தரையில் விழுந்தார்.

மருத்துவப் பணியாளர்களும் பொலிஸாரும் பலத்த காயமடைந்த மாணவியை ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 வயது சிறுமி முகலா நகரில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு  18 நாட்கள் உயிருக்கு போராடியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மெலிக்கின் உடல் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 30 அன்று அடக்கம் செய்யப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இயக்குனராக மஹேல ஜெயவர்த்தன நியமனம்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால், முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்