26.7 C
Jaffna
January 5, 2025
Pagetamil
சினிமா

பிரபல நடிகர் கொடுமை: மனைவி புகார்!

போஜ்புரி திரைப்பட நடிகர் பவன் சிங் (36). இவரின் மனைவி ஜோதி. இந்த நிலையில், ஜோதி தனது கணவருக்கு எதிராக தெரிவித்துள்ள புகாரில், “கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி பவன் சிங்கும், எனக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணமான சில நாட்களிலேயே பவன்சிங், அவரது தாயார், சகோதரி ஆகியோர் சேர்ந்து எனது தோற்றம் தொடர்பாக கேலி செய்திருந்தார்கள்.

மேலும் எனது மாமியார் என்னிடமிருந்த ரூ.50 லட்சம் தொகை எடுத்துக் கொண்டார். இந்த பணத்தை எனது தாய் மாமா எனக்கு கொடுத்திருந்த நிலையில், அதனை அவர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் ஒவ்வொரு நாளும் என்னை அடித்து கொடுமை செய்ய தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் தற்கொலையை தூண்டினார்கள். நான் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு மருந்து கொடுத்து கர்ப்பத்தையும் கலைத்தார்கள். எனது கணவர் தினமும் மதுபானம் அருந்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தினார். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துகிறார். அத்துடன் அவர் என்னிடம் மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கும்படி வரதட்சணை கொடுமை செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

Leave a Comment