சிம்புதேவன் இயக்கத்தில் சரித்திர படத்தில் நடிக்கும் யோகிபாபு?

Date:

சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேடத்தில் வெளியானது ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வடிவேலுவுக்கு முக்கியமான படமாக இது அமைந்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கியபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நின்றுபோனது.

இந்நிலையில், ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தைப்போல நகைச்சுவை கதையம்சம் கொண்ட சரித்திர படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்க உள்ளதாகவும், அதில் யோகிபாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யோகிபாபுவை பொறுத்தவரை அவர், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும், விஜய்யுடன் ‘வாரிசு’ படத்திலும் நடித்து வருகிறார். இயக்குநர் சிம்புதேவன் அண்மையில் ‘கசட தபற’, ‘விக்டிம்’ படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்