Pagetamil
இலங்கை

அரச இலக்கிய விழாவில் விருது வென்ற தமிழ் அரசியல் கைதி!

2022 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் அரசியல் கைதியான சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (28) நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பித்தளை சந்தியில் 2006ம் ஆண்டு அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக சிவலிங்கம் ஆரூரன் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி திக்கத்தை சேர்ந்த இவர், மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடரும் போது கைது செய்யப்பட்டார்.

இவர் மகசீன் சிறையில் இருந்தபோது 7 தமிழ் மொழிப் படைப்புகளையும் ஒரு ஆங்கில மொழிப் படைப்பையும் எழுதியுள்ளார்.

மகசின் சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்கவின் பாதுகாப்புக்கு மத்தியில் பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டனர். அவரது தந்தை ஒரு விமானப் பொறியியலாளர் ஆவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment