25.2 C
Jaffna
January 13, 2025
Pagetamil
விளையாட்டு

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக மீண்டுமொரு தமிழ்பெண்!

சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டிருந்த நேத்ரா, 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றார். 2014 இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு 16 வயது மட்டுமே!

இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தமிழகத்தைச் சேர்ந்த படகோட்டுதல் வீராங்கனை நேத்ரா குமனன் தெரிவாகியிருக்கிறார். 23 வயதான நேத்ராவே இந்தியா சார்பாக படகோட்டுதலில் பங்கேற்கப்போகும் முதல் பெண்!

கடந்த ஆண்டு நடக்கவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் தொடர், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஓராண்டு தள்ளிப்போனது. வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கு பல்வேறு விளையாட்டுகளிலிருந்து பல வீரர் வீராங்கனைகள் தேர்வாகிவருகின்றனர். தமிழகத்தில் இருந்து இதுவரை 4 பேர் பங்கேற்பது உறுதியாகியிருக்கிறது. டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் இதுவரை தங்கள் இடத்தை உறுதி செய்திருக்கின்றனர். இதில் பவானி தேவி, வாள்சண்டையில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இப்போது இன்னொரு தமிழகப் பெண்ணும் டோக்கியோவுக்குப் பயணம் செல்கின்றார்.அவரே சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன். படகோட்டுதல் வீராங்கனையான நேத்ரா ‘Laser Radial’ எனப்படும் பிரிவில் ஒலிம்பிக் தொடருக்குத் தெரிவாகியிருக்கிறார். இது தனிநபர் போட்டி.
2018 ஜகர்தா தொடரில் ஐந்தாம் இடம் பெற்றார். மியாமியில் நடந்த உலகக் கோப்பையில் வெண்கலம் வென்று, உலகக் கோப்பைப் படகோட்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

இப்படி தொடர்ந்து தன் செயல்பாட்டில் முன்னேற்றம் காட்டிவந்தவர், இப்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடருக்குத் தேர்வாகி சரித்திரம் படைத்திருக்கிறார். ஸ்பெய்னில் பயிற்சி பெற்று வரும் நேத்ரா, ஒரு பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment