தலை தீபாவளிக்கு இரட்டைக் குழந்தைகளுடன் நயன் விக்னேஷ் தம்பதிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில, சில நாட்களுக்கு முன்னர், முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
“நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
தற்போது, விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களில், இரட்டைக் குழந்தைகளை தூக்கியவாறு தம்பதிகள் நின்றுக் கொண்டிருக்கின்றனர். அதில், ”என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று தீபாவளி வாழ்த்தையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். நயன் – விக்கி விவகாரம் இதனையடுத்து சூடு பிடிக்க, அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று தெரியவந்தது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.