விக்டோரியா அணையின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ஆளில்லா விமானம் மற்றும் கமெரா மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த 7 சந்தேக நபர்கள் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் எந்தவொரு அனுமதியும் இன்றி சட்டவிரோதமான முறையில் அணைக்கட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆளில்லா விமானம் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் தெஹிவளை, வெலிகம மற்றும் யானக பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1