தாயின் கள்ளக்காதலனால் மகள் துஸ்பிரயோகம்!

Date:

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான குடும்பஸ்தர் ஒருவர், அயலிலுள்ள 38 வயதான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இவர்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் குடிசை வீட்டில், பெண்ணின் 13 வயது மகளின் முன்னிலையில் அவர்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியையும், அந்த நபர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்த, அயலவர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அந்நபரை இன்றைய தினம் கைது செய்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். அவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார்.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்