24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

இனவழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும்; ஜேர்மனியில் கஜேந்திரன் எம்.பி

ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனி வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர், இலங்கைக்கான விசேட பணிப்பாளர், ஜேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆகியோருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றைய தினம் (18) பேர்லினில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இச்சந்திப்பில் ஈழத்தமிழர்கள் அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும், இவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐ.நாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் ஒருபோதும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது. அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை முன்வைக்கவேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜெனீவா தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கலந்துகொண்ட அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒருமித்து தெவித்தார்கள்.

இச் சந்திப்பை தொடர்ந்து ஆளும்கட்சிகளில் ஒன்றான பசுமைக் கட்சியின் கொள்கைவகுப்பாளருடனும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, ஈழத்தமிழர்கள் சார்ந்து சில நிலைப்பாடுகளை உணரமுடிந்தது என்பதையும், அத்தோடு அவர்களுடன் ஒரு தொடர்ச்சியான தகவல்பரிமாற்றத்தை முன்னெடுக்கவும் அவர்களுடனான தொடர்பை பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி ப.அஞ்சனா மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களும் கலந்துக் கொண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பேர்லின் நகர உணர்வாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களை சந்தித்து வரவேற்ற தருணத்தில் வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பு, தாயக மக்களின் நிலைமை, இன்று தமிழ் இனத்திற்கான விடுதலையை நோக்கிய அரசியலுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான ஆபத்து, விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் மக்களின் வகிபாகம் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா: பாடசாலைகளில் உணவு வழங்கல் திட்டத்தை இணைக்க பரிந்துரை

east tamil

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

வாளுடன் மாணவர் கைது

east tamil

இனி இரவில் அதிவேகமாக சென்றாலும் சிக்குவீர்கள்

Pagetamil

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

east tamil

Leave a Comment