3வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

Date:

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 100 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவர்களில் எட்டியது இந்தியா. இதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தப் பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்களையும் அந்த அணி இழந்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் பேட் செய்தது தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. அதன் காரணமாக 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணி. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 8 ரன்களிலும், இஷான் கிஷன் 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஷ்ரேயஸ் ஐயர், 23 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார்.

நிலைத்து நின்று விளையாடிய கில் 57 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் அரை சதத்தை மிஸ் செய்தார். சஞ்சு சாம்சன், 2 ரன்கள் எடுத்தார். முடிவில் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. இதன் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்