செல்வம் பெருக 2 தமிழ் பெண்கள் நரபலி: நீலப்படம் நடிக்க அழைத்துச் செல்லப்பட்டு கொலை!

Date:

முகநூல் ஊடாக வலைவிரித்து இரு பெண் லாட்டரி வியாபாரிகள் மந்திரவாதியால் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்வம் கொழிப்பதற்காக அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.

தர்மபுரியை சேர்ந்த 52 வயதான பத்மா என்ற பெண் கேரள மாநிலம், எர்ணாகுளம் அடுத்த கடவந்திராவில் தங்கி லாட்டரி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த செப்ரெம்பர் 26ஆம் திகதி இவர் மாயமானார். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 27ம் திகதி உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

திருசூர் கடற்கரை காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் என்ற 50 வயது லாட்டரி வியாபாரியும் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கடவந்திரா போலீசார் நடத்திய விசாரணையில் பத்மாவின் மொபைல் டவர் லொகேஷன் கடைசியாக திருவல்லாவில் இருப்பது தெரியவந்தது. திருவல்லாவை மையமாக வைத்து போலீசார் நடத்தும் விசாரணையில் ஷாபி, பகவால்சிங் ஆகிய அனைவரும் காவல்துறையின் எல்லைக்குள் வருகிறார்கள். இறுதியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மூவரும் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நரபலி குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவல்லாவை சேர்ந்தவர் பாரம்பரிய வைத்தியர் பகவந்த்சிங். மனைவி லைலா.

முகமட்  ஷாபி  என்ற நபர், ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கை இயக்கி வந்தார். அந்த கணக்கின் மூலம், பகவந்த் சிங்குடன் அரட்டை அடித்து வந்தார். ஸ்ரீதேவி உண்மையான பெண் என நம்பிய பகவந்த் சிங், கடலை போட்டு வந்தார்.

இதன்போத, பேஸ்புக் தகவல் வழியாக ஒரு தகவலை பகவந்த் சிங்கிற்கு அனுப்பினார்.

பெரும்பாவூரில் ஷிஹாப்  என்ற சித்தர் இருப்பதாகவும், அவரைத் திருப்திப்படுத்தினால் பொருளாதார வளம் பெருகும் என்றும், அவர்களை பிடித்த சாபம் நீங்கும் என்றும் பகவந்த் சிங்கை நம்ப வைத்தார். அத்துடன், ஷிஹாபின் தொலைபேசி இலக்கம் என தனது தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தார்.

அந்த இலக்கத்துடன் பகவந்த் சிங் பேசினார்.

பின்னர், பகவந்த் சிங்கின் வீட்டிற்கு  ஷிஹாப் என கூறிக்கொண்டு, ஷாபி   வந்தார். ஆன்மீக சக்தியை அதிகரிப்பதற்கும், பொருளாதாரம் செழிக்கவும் வழியென கூறி பகவந்த் சிங்கின் கண்ணெதிரே, அவரது மனைவி லைலாவுடன் உடலுறவு கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த குடும்பத்திற்கும் ஷிஹாப் இற்குமிடையில் நெருக்கம் அதிகரித்தது.

அத்துடன், மேலும் செல்வம் பெருகவும், அவர்களை பிடித்த சாபம் நீங்கவும் இருவரை நரபலியிட வேண்டுமென்றார். தேவையெனில் ஸ்ரீதேவியிடம் கேட்டுப்பார்க்குமாறும், அந்தப் பெண் புத்திசாலியென்றும் ஷிஹாப் கூறினார்.

பகவந்த் சிங், ஸ்ரீதேவி என்ற பேஸ்புக் கணக்கிற்கு இது தொடர்பில் தகவல் அனுப்பினார். இருவரை நரபலியிட்டால் செல்வம் பெருகுமென மறுமுனையிலிருந்து பதில் வந்தது.

இதையடுத்து, நரபலிக்கு பகவந்த் சிங் தம்பதி ஒத்துக்கொண்டது.

ஷிஹாபிற்கு லாட்டரி விற்கும் பத்மா, ரோசலினை தெரியும். அவர்களை தனது வலையில் விழுத்தி, நீலப்படத்தில் நடித்தால் 10 இலட்சம் ரூபாய் தருகிறேன் என ஆசைவார்த்தைக்கூறி இரண்டு பெண்களையும் அழைத்துச் சென்றுள்ளான்.

ஜூன் மாதம் பகவந்த் சிங்கின் வீட்டில் ரோசிலி முதலில் பலி கொடுக்கப்பட்டார். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பூஜை அறையில் ஒரு படுக்கையில் கட்டப்பட்டார். ரோசிலியை ஏன் கட்டி வைக்கிறார்கள் என்று கேட்டதற்கு, வீடியோவில் அதை யதார்த்தமாக காட்டுவதற்காகத்தான் என்று பதிலளித்துள்ளனர்.

ரோசிலியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளனர். பின்னர், லைலா கழுத்தை அறுத்து, அந்தரங்க உறுப்புகளில் கத்தியால் குத்தினார். அங்கிருந்து வெதுவெதுப்பான ரத்தத்தை சேகரித்து வீட்டைச் சுற்றி தெளித்தார். அவர்களை சாபத்தில் இருந்து விடுவித்து, விரைவில் பணக்காரர் ஆவதற்கு இது செய்யப்பட்டது.

இதையடுத்து தம்பதியிடம் இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு இளந்தூரில் இருந்து ஷாபி திரும்பினார்.

முதல் நரபலிக்குப் பிறகும் எதிர்பார்த்த பலன் இல்லை என்று பக்வால் சிங் புகார் கூறியதை அடுத்து,  இரண்டாவது நரபலியை செய்ய வேண்டுமென ஷாபி கூறினார். முதல் நரபலி பலிக்காமல் போனதற்குக் காரணம் குடும்பத்தின் மீதான சாபமே என்று ஷாபி கூறினார். இரண்டாவது நரபலியுடன் இது மாறி முழுமையான செழிப்பு அடையும் என்று நம்பப்பட்டது. பின்னர் இரண்டாவது பலியான பத்மா கண்டுபிடிக்கப்பட்டார்.

இரு பெண்களையும் நரபலி கொடுத்த பின்னர், அவர்களது உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி திருவல்லா அருகே புதைத்துள்ளதாகவும் ஷாபி  வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொடூர நரபலி சம்பவம் தொடர்பாக மந்திரவாதி ஷாபி , பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, கூட்டாளி ஷிஹாப் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில்,  பத்மாவின் உடல் மீட்கப்பட்டது. 4 அடி ஆழமான குழியில் அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தது. உடல் 22 துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட பின்னர் சடலத்தின் மீது உப்புத்தண்ணீர் தெளிக்கப்பட்டு, புதைக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் மஞ்சள் தூவப்பட்டிருந்தது.

அருகிலேயே  ரோஸ்லின்  உடல் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவரது உடலும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

மந்திரவாதி ஷாபி 2020ஆம் ஆண்டு, 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கில் ஒரு வருடம் சிறையில் இருந்துள்ளா்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்