யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பெறப்பட்ட 1003 பிசிஆர் மாதிரிகள், ஸ்ரீஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இவர்களில் 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதில், திருநெல்வேலி பாற்பண்ணை பாரதிபுரம் கிராமத்தில் 88 பேரும், புதிய சந்தை தொகுதியுடன் தொடர்புடைய 20 பேர் அடங்கலாக யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், சங்கானையில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




