காலிமுகத்திடலில் இன்று (9) மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்களை நினைவு கூறும் வகையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காலிமுகத்திடலை ஒட்டி மாலை 5.30 மணியளவில் போராட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்தனர்.
இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தின் போது 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்




