30.2 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

மோட்டார் சைக்கிள் வாங்க சென்ற மன்னார் தம்பதி: ஓடும் புகையிரதத்திற்குள் கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை!

புகையிரதத்திற்குள் வாளுடன் ஏறிய இரு கொள்ளையர்கள், தம்பதியினரை தாக்கி, மனைவியின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (6) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து வாதுவ நோக்கி பயணித்த புகையிரதம், அங்குலான புகையிரத நிலையத்தை அடைந்த போது, ​​இரு கொள்ளையர்களும் புகையிரதத்தில் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் புகையிரதத்தில் ஏறும் போது அந்த பெட்டியில் கணவனும் மனைவியும் மட்டுமே பயணித்ததாகவும், சந்தேகநபர்கள் மனைவியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயன்றதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு புகையிரதத்தில் இருந்த பலர் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அப்போது கொள்ளையர்கள் இருவரும் ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து குதித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பயணிகள் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) அறிவித்ததை அடுத்து மொரட்டுவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து குதித்த சந்தேக நபர் ஒருவர் காயமடைந்து புகையிரத தண்டவாளத்தில் விழுந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகையிரதத்தில் இருந்து குதித்த மற்றைய சந்தேகநபர் 2 இலட்சம் ரூபா தங்க நகை மற்றும் பணப்பையை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த கணவன் மற்றும் மனைவி இருவரும் மன்னார் பள்ளிமுனை தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மொரட்டுவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக வந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த தம்பதியினர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொள்ளையனின் தலையில் காயங்கள் இருப்பதாகவும், சந்தேக நபர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறை சென்றவர் எனவும் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் எனவும் மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

மீண்டும் மஹிந்த கால பாணியில் நடக்கும் ஜேவிபி அமைச்சர்கள்!

Pagetamil

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!