27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

யாழில் பாடசாலைகளிற்கு அருகில் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றங்கள்!

யாழ் ஆரோக்கிய நகர திட்டத்தினால் துவிச்சக்கரவண்டி பாவனையை
ஊக்குவிக்கவும் , வீதி விபத்துகளை குறைத்துக் கொள்ளும் நோக்குடனும் ஆவணி
மாதம் முதலாம் திகதி விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று பல்வேறு குழுக்களின்
பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இச் செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இதன் முதற் கட்டமாக துவிச்சக்கர வண்டிப் பாவனையை ஊக்குவிப்பதற்காகவும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் முகமாகவும் பாடசாலை சமூகம் கவனத்திற்  கொள்ளப்பட்டது.

குறிப்பாக மூன்று பாடசாலை வளாகங்கள் இதற்காக தெரிவுசெ ய்யப்பட்டன.
அதன்படி யாழ்/இந்துக் கல்லூரி மற்றும் யாழ்/ இந்து ஆரம்ப பாடசாலைகளை
அண்மித்த பகுதிகள் ஒரு வழிப் பாதைக்கும் , துவிச்சக்கர வண்டிப் பாவனைக்கு ஏற்ற
வீதிகளாகவும் நடைமுறை ப்படுத்த ஆரம்பத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது இன்று (21.09.2022) இல் இருந்து நடை முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
பாடசாலை வேளைகளில் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் மாத்திரம் ( காலை 6.45 -8.00
மற்றும் பிற்பகல் 1.00-2.00 ) நடை முறை ப்படுத்தப்படும் என்பதனை
அறியத்தருகின்றோம்

அதற்காக சில வழிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

● வழிமுறை 1 – கஸ்தூரியார் வதீி ஒரு வழிப் பாதையாக
கொண்டுவரப்படுகின்றது. அரசடி வீதியிலிருந்து கஸ்தூரியார் வீதிக்குள் உள்
நுழையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியினை (roundabout) அடை ந்து வலது
பக்கமாக கல்லூரி வீதிக்குள் திரும்புவது தடை செ ய்யப்பட்டுள்ளது

● வழிமுறை 2 – KKS வீதியிலிருந்து சுற்றுச்சந்தி (roundabout) வரையான
கல்லூரி வீதி ஒரு வழிப் பாதையாக கொண்டுவரப்படுகின்றது. இங்கு KKS
வீதியிலிருந்து யாழ்/இந்துக் கல்லூரி நுழை வாயிலை அடை யும் வாகனங்கள்
சுற்றுச்சந்தியினை அடை ந்து வலது மற்றும் நேரான வீதிகளினூடாக வெளிச்
செல்ல முடியும்.

● வழிமுறை 3 – கல்லூரி ஒழுங்கை துவிச்சக்கர வண்டிப் பாவனைக்கு மட்டும்
ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ் வழிமுறை களை பின்பற்றுமாறு அன்புடன்
கேட்டுக்க கொள்கின்றோம்.

இத் திட்டமானது ஒரு பாதுகாப்பு மிக்க வீதிகளை பாடசாலை சமூகத்திற்கும் பொது
மக்களுக்கும் ஏற்படுத்தி க கொடுப்பதினை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதி வழிமுறைகள் உள்ளடங்கிய பதாதைகள் குறிப்பிட்ட வீதிகளில்
வைக்கப்படுள்ளது . அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தன்னார்வாளர்கள்
மற்றும் பாடசாலை சமூகம் இவ் ஆரம்ப பரீட்ச்சாத்த நடவடிக்கையின்போது, பொது
மக்களுக்கு வழி காட்டியாக இருப்பார்கள் என்பதை அறிய தருகின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மருதானை பொலிஸில் தமிழ்ப் பெண் மரணம் – கொலையா?

east tamil

விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு நஷ்டஈடு அவசியம் : ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

east tamil

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம் இதுதான்: ஜேவிபியின் கண்டுபிடிப்பு!

Pagetamil

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் – விஜித ஹேரத்

east tamil

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

Leave a Comment