சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மதகுருவின் மேன்முறையீட்டில் தண்டனை அதிகரிப்பு!

Date:

சிறுமியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக மதகுருவிற்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டில், 11 ஆண்டு சாதாரண சிறைத்தண்டனையிலிருந்து 15 ஆண்டுகள்-கடூழிய சிறைத்தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதகுரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த பெர்னாண்டோ மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தன்மை மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் இரண்டாவது குற்றச்சாட்டின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தில் உள்ள ஆலயமொன்றின் ஞாயிறு பாடசாலையின் ஆசிரியரான மதகுரு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை நிராகரித்து, எந்த ஒரு பெண்ணும் இதுபோன்ற குற்றத்திற்காக கதையை புனைய ஆசைப்பட மாட்டார்கள் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டது.

நம்மைப் போன்ற கலாச்சாரம் மற்றும் சமூகப் பின்புலம் கொண்ட நாட்டில் ஒரு மதகுரு தனது சொந்த எதிர்காலத்தை இருண்டதாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கி 14 வயது சிறுமியின் முழு எதிர்காலத்திலும் வடுவை ஏற்படுத்துதியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மதகுருவிடம் செல்லும் குழந்தை, சாதாரண மனிதரிடம் செல்வது போல் இல்லாமல், பாதுகாவலரை எதிர்பார்க்கிறது என்றும், அந்த மதகுரு தனக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டார் என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி தெரிவித்தார்.

ஒரு சாதாரண நபரால் சிறுமியை துஷ்பிரயோகம் செய்வதை விட, அவரது ஆசிரியரான மதகுருவிடம் வந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது மிகவும் கடுமையானது என்று நீதிபதி களுஆராச்சி மேலும் கூறினார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகளை கண்டறிவது கடினம் எனவும், அது கண்ணுக்கு தெரியாததால் மதிப்பிட முடியாது எனவும் நீதியரசர் களுஆராச்சி குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல் குற்றத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அதை 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது. இரண்டாவது குற்றத்திற்காக 11 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை விதித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் முதல் குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு (வழிபாட்டிடத்தில் இருந்து 100-150 மீட்டர் தொலைவில்) இரவு 10 மணியளவில் வந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஜன்னல் வழியாகப் பேசி, அவரைச் சந்திக்க வீட்டிற்கு வெளியே வரும்படி கூறினார்.

அதன்பிறகு, சிறுமியை வழிபாட்டிடத்தில் உள்ள “தர்ம சாலவா” க்கு அழைத்துச் சென்றார்.

பாதிக்கப்பட்ட பெண் வழிபாட்டிடத்திற்கு தானே வந்தார், அவரை நான் வரச் சொன்னதில்லை என மதகுரு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் இரவில் வழிபாட்டிடத்தில் தன்னுடன் இருந்ததை குற்றம் சாட்டப்பட்டவர் கூட ஒப்புக்கொள்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கருதுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இரவில் கண்விழித்து பார்த்தபோது, ​​தனது மகளை காணவில்லை என்பதை கவனித்தார்.

பின்னர் அவர் கணவருக்கு தகவல் கொடுத்தார். தந்தை மற்றும் பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரர் வழிபாட்டிடத்திற்குச் சென்றனர், அங்கு அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்