26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

‘இலங்கை பாணி குளிப்பு’: ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள்!

பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் உள்ள அரசாங்க கட்டிடத்தை ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து ஈராக் இராணுவம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் 29, திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி முதல் (1600 GMT) ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்தது.

மதகுரு அல்-சதர், அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர்.

பசுமை மண்டலத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

செல்வாக்கு மிக்க ஷியா மதகுரு அல்-சதர், அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகுவதாக திங்களன்று ருவிற்றரில்  அறிவித்தார்.

“அரசியல் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். எனவே, எனது உறுதியான ஓய்வை இப்போது அறிவிக்கிறேன்” என்று சதர் ருவீட் செய்துள்ளார்.

சதர் ருவீட் செய்த சிறிது நேரத்திலேயே எதிர்ப்பு கிளம்பியது. அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

பாக்தாத்தின் கோட்டையாக பசுமை மண்டலப் பகுதி கருதப்படுகிறது. உயர்பாதுகாப்பு நிறைந்த அந்த பகுதிக்குள்ளேயே வெளிநாட்டு தூதரகங்களும் இயங்குகின்றன.

போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் தலைமையகத்திற்குள் நுழைந்ததை அடுத்து, ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அமைச்சரவை அமர்வுகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தினார் என்று மாநில செய்தி நிறுவனமான ஈராக் செய்தி நிறுவனம் (INA) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த எதிர்ப்பார்கள், சந்திப்பு அறையில் நாற்காலிகளில் அமர்ந்தனர், மற்றவர்கள் ஈராக் கொடிகளை அசைத்து தங்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் – மற்றவர்கள் தோட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் குளித்தனர்.

“மொக்தாதா, மொக்தாதா” என்று கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பசுமை மண்டலத்தை நோக்கிச் சென்றனர். வன்முறையை தொடர்ந்து, இராணுவம் “தலைநகர் பாக்தாத்தில் முழு ஊரடங்கு உத்தரவை” பிற்பகல் 3:30 மணி முதல் (1230 GMT) அறிவித்தது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் இருந்து ஈராக் அரசியல் முட்டுக்கட்டையில் உள்ளது. இதனால் நாட்டில் அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லாமல் போய்விட்டது. கூட்டணி அமைப்பதில் பல பிரிவுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. யாரும் அறுதிப்பெரும்பான்மையை பெறவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment