ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காதலன்: அதே ஆற்றில் குதித்து தற்கொலை செய்த 19 வயது காதலி!

Date:

மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வல கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி நில்வல கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காணாமல் போன மனுஷ்க யோஹான் என்பவரின் காதலியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்புருபிட்டிய, மீபாவிட்ட, ரன்சகொட பிரதேசத்தில் வசித்து வந்த அஷானி ஹன்சிகா என்ற 19 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெலிகம லார்ட்ஸ்டார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மலித உதயங்க என்பவர் தனது மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு வந்து, கிராமத்தில் உள்ள தனது வீட்டில்  நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஒதுக்குப்புறமான வீடொன்றில் நடந்த விருந்தில் 13 இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்..

மதுபோதையில் நண்பர்கள் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, திடீரென நீர்மட்டம் அதிகரித்து ஒரு இளைஞன்  அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற 3 இளைஞர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.

இளைஞர்களின் கூக்குரல் கேட்டு கிராம மக்கள் உதவிக்கு விரைந்த போதும் உடனடியாக அவர்களை காப்பாற்ற முடியவில்லை. கிராம மக்கள், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில் 3 இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மனுஷ்க யோஷனின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

3வது இளைஞனின் சடலம் 27ஆம் திகதி மீட்கப்பட்ட நிலையில், மனுஷ்க யோஷனின் காதலி 27ஆம் திகதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்