ரூபவாஹினிக்குள் நுழைந்த மற்றொரு மாணவர் செயற்பாட்டாளர் கைது!

Date:

சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவர் செயற்பாட்டாளர் இன்று காலை கருவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானதாக சோசலிச மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 2வது நபரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமிந்த கெலும்பிரிய அமரசிங்க, காலி முகத்திடல் போராட்டக்காரர் டனிஷ் அலியுடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ரூபவாஹினி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்