திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

Date:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் பட்டர்கள், நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றிவைத்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள கல்த்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவ.24-ம் திகதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள கல்த்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

மலை பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீஸார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டபோது உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோயில் பட்டர்கள், நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றிவைத்தனர். மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை, மலையடிவாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து, பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

இன்று நடைபெற்ற தீபமேற்றும் நிகழ்வில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பக்தர்கள், பொதுமக்கள் மலையேற அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, ‘பொது மக்களின் பாதுகாப்பு, மலைப் பகுதியின் புனிதம் மற்றும் சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட குழுவினரை தவிர இதர பொது மக்கள் மற்றும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை” என்று மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது.

முன்னதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழுவினர் இன்று காலை 11.24 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையில் கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.

பின்பு கோயில் மூலஸ்தானத்தில் சத்தியகீரிஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தனர். அங்கு ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் காட்டி மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்பு திருவாட்சி மண்டபம் முன்பு மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரிய 3 மண் சட்டிகள், 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் அடங்கிய பூஜை பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பூஜை செய்த பொருட்களை பின்னர் நீதிபதிகளிடம் ஒப்படைத்தனர்.

கோயிலிலிருந்து வெளியே வந்த குழுவினர் கோயிலிலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கிரிவல வீதிகளில் மேளம் தாளங்கள் முழஙகவும், பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்புடனும் மலையடிவாரப் பகுதியான கோட்டைத்தெரு பகுதிக்கு நடந்தே வந்தனர். அப்போது கிராம பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்கவும், பூக்கள் தூவியும் வரவேற்றனர்.

மலையடிவாரத்துக்கு வந்த நீதிபதிகள் தாங்கள் கைகளில் ஏந்தி வந்த மண் சட்டிகளை கோயில் பணியாளர்களிடம் ஒப்படைத்து தீபம் ஏற்றுவதற்கு மலைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். பின்பு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாநகர போலீஸாரின் பலத்த சோதனைக்கு பின்னரே மதியம் 12.20 மணியளவில் மலையபடிவாரப் படிக்கட்டுகள் வழியாக மலைக்கு சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

மூளைச்சாவு அடைந்த இளைஞனின் இதயம் வெற்றிகரமாக மாற்றப்பட்டது

விபத்தொன்றைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயது இளைஞர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்