வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

Date:

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் இன்றைய தினமாகும்.

அதனை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு , இன்றைய தினம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இரண்டு கேக்கள் வெட்டப்பட்டு , அங்கு வந்திருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது, அத்துடன் எள்ளு பாகு , சொக்லேட் என்பவையும் வழங்கப்பட்டது.

அதேவேளை , பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பிறந்தநாளை மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , புலிகளின் தலைவரின் பூர்வீக வீடு அமைந்துள்ள குறித்த காணியின் மதிலில் “தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லம்” என பதாகையும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

முன்னர் கட்டப்பட்டிருந்த பதாகை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்ட நிலையில் புதிய பதாகை கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்