யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கடமையேற்பு நிகழ்வில், அவருக்கு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மதத் தலைவர்களின் ஆசியுடன் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆறு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ஒஷான் ஹேவா விதாரண யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் மாறப்பன களுத்துறை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த இடமாற்றத்தின் அடிப்படையில், ஒஷான் ஹேவா விதாரண யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.




