மஸ்கெலியா பாடசாலையில் 35 மாணவர்கள் திடீர் சுகவீனம் – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் 35 மாணவர்கள் இன்று (20) காலை திடீரென சுகவீனமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை சுமார் 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் மூன்று வகுப்பறைகளில் கல்வி பயிலும் 96 மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட பின்னர், அவர்களில் சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 35 மாணவர்களும் மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 35 மாணவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

எனினும், இரண்டு மாணவிகளும் மூன்று மாணவர்களும் அடங்கலாக ஐந்து மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலுக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்