ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

Date:

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக டெய்சி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 ஆண்டுகளாக ஒருவரது வாழ்வில் மற்றொருவர் அங்கமாக இருந்த நிலையில், நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை ஒன்றாகக் கடந்து வந்த இந்தப் பயணம் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.

இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதியராகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் எங்களது அர்ப்பணிப்பு எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் தேர்ந்தெடுத்து முன்னெடுக்கும் அனைத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். இந்த மாற்றத்தை நாங்கள் கடந்து செல்லும் இவ்வேளையில், உங்களது புரிதலையும், அன்பையும், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் மனதாரக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் லீமா ரோஸ் ஆகியோரின் மகளான டெய்சி மார்ட்டினை, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆதவ் அர்ஜுனா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்