ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

Date:

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த பெண் ஒருவர் மீது உறவினர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலையில் பெற்றோலை ஊற்றி தீ வைத்ததில் அவர் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை (5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது—

குறித்த பெண் சம்பவ தினமான 3ம் திகதியான செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் கதிரையில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தார். இதன் போது அவருக்கு தெரியாமல் வீட்டின் பின் பகுதியால் சென்ற அந்த பெண்ணின் உறவினரான ஆண் ஒருவர்  அந்த பெண் மீது பெற்றோலை ஊற்றி தீயிட்டதையடுத்து அவர் தீப்பற்றிக் கொண்டார்

இதனையடுத்து  குறித்த பெண் சத்தமிட்டதையடுத்து அருகிலுள்ளவர்கள்  சென்று தீயை அனைத்து காப்பாற்றி படுகாயமடைந்த அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தீயிட்டவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து தலைமறைவாகி இருந்த குறித்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவரான அவரை புதன்கிழமை (4) திகதி கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில்   குறித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை 5ம் திகதி காலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்