நவம்பர் 01 முதல் வாகனம் பதிவு, வருமான வரிப் பத்திரம் பெற புதிய நடைமுறைகள் அமுல் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் IRD சுற்றறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை

Date:

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச செயலகம் பொது அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு வருமானத் திணைக்களத்தின் (IRD) 2026 செப்டம்பர் 22 ஆம் திகதியிட்ட SEC/2026/E/07 இலக்கச் சுற்றறிக்கை மற்றும் 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு வருமான (திருத்தச்) சட்டத்திற்கு இணங்க, கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் பின்வரும் புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படுகின்றன:   வாகன வருமான வரிப் பத்திரம் (Vehicle Revenue License): வாகன வருமான வரிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் வாகன உரிமையாளர்கள், பதிவுச் சான்றிதழின் மூலப் பிரதியுடன் (CR) தமது TIN சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC – மூலப் பிரதி அல்லது நிழற்படப் பிரதி) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகன உரிமை மாற்றம்: வாகன உரிமை மாற்றம் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் MTA-11 மற்றும் CMT-52 படிவங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், CMT-52 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் TIN சான்றிதழை வழங்க வேண்டும்.   டிஜிட்டல் பிரதிகளுக்கு அங்கீகாரம்: TIN ஆவணங்களின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மின்சாரப் பிரதிகள் (திரைப்பிடிப்புகள் / Screen Printouts உட்பட) இரண்டையும் ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து தொடர்பான சேவைகளைப் பெற வருகை தரும் போது தேவையான ஆவணங்களை முறையாகச் சமர்ப்பித்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நிந்தவூர் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்