யாழில் நேற்று 5 பேர் பலி

Date:

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்தனர்.

அளவெட்டி, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் காயமடைந்து தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தின் போது மதில் இருவருக்கும் மேல் விழுந்தமையினாலேயே இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சஞ்சய் (வயது 17) மற்றும் ரஜீவன் (வயது 36) ஆகியோரே உயிரிழந்தனர்.

அளவெட்டிப் பகுதியில் அதிக போதை ஏற்றியதாக சந்தேகிக்கப்படும் 26 வயதையுடைய ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த நால்வரின் உடல்களும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் பகுதியில் வயலில் வேலை செய்த ஒருவர் நீரில் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப.பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்