கணவனை கொலை செய்துவிட்டு நாடகம்: மனைவியும், இரு காதலர்களும் கைது!

Date:

தெலங்கானாவின் காமாரெட்டி மாவட்டத்தில், தனது கணவரைக் கொன்று, அந்த மரணத்தை விபத்து என்று நம்பவைப்பதற்காக அவரது உடலை ஏரியில் வீசியதாக, ஒரு பெண்ணையும் அவரது இரு காதலர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் ஹன்மாஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த, தினக்கூலித் தொழிலாளியான 26 வயது சக்கலி என்கிற கும்மாடி காசிராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒக்டோபர் 23-ம் திகதி இரவு, கிராமத்திற்கு வெளியே உள்ள பச்சேரா செருவு (ஏரி) பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

காசிராமின் மனைவி கும்மாடி சவிதா (25), தனது இரு காதலர்களான சிந்தகிந்தி ராமு (26) மற்றும் பசுபுலா சந்தோஷ் (25) ஆகியோருடன் இணைந்து, கணவரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சவிதா, தினக்கூலித் தொழிலாளியான ராமு மற்றும் டிராக்டர் ஓட்டுநரான சந்தோஷ் ஆகிய இருவருடனும் உறவில் இருந்ததாகவும், கணவரை ஒழித்துக்கட்ட அவர்களுடன் சேர்ந்து சதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஒக்டோபர் 23-ம் திகதி இரவு, மது அருந்துவதாகக் கூறி காசிராமை அந்த மூவரும் வெளியே அழைத்துச் சென்றனர். காசிராம் போதையில் இருந்தபோது, ​​ராமு அவரை நைலோன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றார்; அதே நேரத்தில் சந்தோஷ் அவர் தப்பித்துச் செல்லாதவாறு பிடித்துக்கொண்டார். கொலையைச் செய்த பிறகு, அவரது உடலைப் பச்சேரா செருவில் வீசிவிட்டு, அது விபத்து என்று காட்ட ஆதாரங்களை அழிக்க முயன்றனர்.

காசிராமின் தந்தை சக்கலி பூமய்யா அளித்த புகாரின் பேரில், பன்சுவாடா காவல்துறையினர் முதலில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கையில் இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 103-ன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது.

குற்ற நடந்த இடத்தைப் ஆய்வு செய்தல், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைக் கொண்டு, என்ன நடந்தது என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒக்டோபர் 30-ம் திகதி ஹன்மாஜிபேட் கிராமத்தில் வைத்து மூன்று சந்தேக நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையின்போது, ​​தாங்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். குற்றச் செயலுடன் தொடர்புடைய அலைபேசிகள் மற்றும் பிற பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கு தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-ன் பிரிவு 103 மற்றும் 238-ன் கீழ், பிரிவு 3(5)-உடன் இணைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்